மும்பை டெஸ்ட் தேநீர் இடைவேளை: முரளி விஜய், கோலி சதம்; இந்தியா 348/6
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாவது நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.
அணித்தலைவர் விராத் கோலி 83 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.
முன்னதாக முதல் பாதியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் டெஸ்ட் போட்டியில் தனது எட்டாவது சதத்தினை நிறைவு செய்தார். உணவு இடைவேளைக்கு பிறகு அவர் 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.தேநீர் இடைவேளைக்குப் பிறகு விராத் கோலியும் சதமடித்தார்.