முகப்பு
செய்திகள்

ஒரே வருடத்தில் மூன்றாவது தடவை: இது கோலி ஸ்பெஷல் 200

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில்  மூன்றாவது தடவையாக... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் எடுத்த பொழுது விராத் கோலி 2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில்  மூன்றாவது தடவையாக 'டபுள் செஞ்சுரி' அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

நேற்றைய ஆட்டத்தில் 35 ரன்களை எட்டிய பொழுது இந்த வருடத்தில் 1000 ரன்களை எடுத்த ஒரே இந்திய வீரர்  என்ற சாதனையை கோலி எட்டினார். அத்துடன் இந்த ஆண்டில் 1000 ரன்களை எடுத்த பட்டியலில் உலக அளவில் நான்காவது வீரராகவும் இடம் பெற்றார்.

இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்பாக 165-ஆவது ஓவரில் 200 ரன்களை கோலி எட்டிய பொழுது,  2016-ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில்  மூன்றாவது தடவையாக 'டபுள் செஞ்சுரி' அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

அத்துடன் உலக அளவில் இந்த பட்டியலில் கோலி ஐந்தாவது வீரராக இடம் பிடித்துள்ளார். அத்துடன் 9-ஆவது விக்கெட்டுக்கு ஜெயந்த் யாதவுடன் சேர்ந்து அவர் எடுத்துள்ள 215 ரன்கள் என்பது ஒரு இந்திய சாதனையாகும். 

முழு கட்டுரையைப் படிக்க →