மும்பை டெஸ்ட் தேநீர் இடைவேளை: இந்தியா 631-க்கு 'ஆல் அவுட்'!; இங்கிலாந்து 49/3
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா தனது முதல் இன்னிங்சில் 631 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளையின் போது, இந்தியா தனது முதல் இன்னிங்சில் 631 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி , மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 631 ரன்களை எடுத்துள்ளது.
அணித்தலைவர் விராத் கோலி 235 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்து வீச்சில், ஆண்டர்சனிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் 9-ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இந்தியாவின் ஜெயந்த் யாதவ் சதம் அடித்து, 104 ரன்களில் ரஷீத் பந்து வீச்சில் 'ஸ்டாம்பிங்' முறையில் அவுட்டானார். ஜெயந்த் இதன் மூலமாக ஒரு இந்திய சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து சார்பாக ரஷீத் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கட்டுளை வீழ்த்தினர்.
பின்னர் 232 ரன்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னங்க்ஸை துவக்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணித்தலைவர் குக் 18 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஜடேஜா பந்துவீச்சில் 'எல்பிடபிள்யூ' முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஜென்னிங்ஸ் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். அவருக்கு பின் களம் புகுந்த மொயீன் அலி ஜடேஜா வீசியாய் பந்தில் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார்.