அமித் பங்கால் (கோப்புப் படம்) 
செய்திகள்

காமன்வெல்த் குத்துச்சண்டை: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீரர்

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

DIN

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிர்மிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் ஸ்காட்லாந்தின் லென்னோன் முல்லிகனை எதிர்கொண்டார் இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால். 2018 காமன்வெல்த் போட்டிகளில் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இன்றைய காலிறுதி ஆட்டத்தில் 5-0 என எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியதுடன் இந்த வெற்றியின் மூலம் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார் அமித் பங்கால். குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 4-வது பதக்கமும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.  

நேற்றைய குத்துச்சண்டை போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வியடைந்தாலும் நிகத் ஸரீன் (50 கிலோ), நிது கங்காஸ் (48 கிலோ), முஹமது ஹஸாமுதீன் (57 கிலோ) ஆகிய இந்தியர்கள் குத்துச்சண்டை அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

வெண் அமிழ்தம்... ரஷ்மிகா மந்தனா!

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT