செய்திகள்

2-வது ஒருநாள்: ஜிம்பாப்வே அணி மீண்டும் தடுமாற்றம்

2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியுள்ளார்கள்.

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியுள்ளார்கள்.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. ஹராரேவில் நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தீபக் சஹாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணியில் இரு மாற்றங்கள். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுவிடும். 

முதல் ஒருநாள் ஆட்டம் போலவே 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியுள்ளார்கள். ஜிம்பாப்வே அணி முதல் 21 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. முதல் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்தது. இதுவரை ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT