செய்திகள்

ஆசியக் கோப்பையை வென்ற அணிகளின் பட்டியல்

DIN

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசியக் கோப்பைப் போட்டியை இதுவரை வென்ற அணிகள்

1984 - இந்தியா
1986 - இலங்கை 
1988 - இந்தியா
1991 - இந்தியா
1995 - இந்தியா
1997 - இலங்கை
2000 - பாகிஸ்தான் 
2004 - இலங்கை
2008 - இலங்கை
2010 - இந்தியா
2012 - பாகிஸ்தான் 
2014 - இலங்கை 
2016 - இந்தியா
2018 - இந்தியா

2022 போல 2016-ல் ஆசியக் கோப்பைப் போட்டி டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு டி20 போட்டியாக நடைபெற்றது. அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டி 50 ஓவர் போட்டியாக நடைபெறவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT