செய்திகள்

2018 சம்பவத்தை மறக்கவில்லை: பாண்டியா உருக்கம்

DIN


2018 ஆசியக் கோப்பைப் போட்டியில் நடைபெற்ற சம்பவத்தை மறக்கவில்லை என ஆல்ரவுண்டர் பாண்டியா பேட்டியளித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

ஆட்டம் முடிந்த பிறகு பிசிசிஐக்காக பாண்டியாவைப் பேட்டி கண்டார் ஜடேஜா. அப்போது பாண்டியா கூறியதாவது:

2018 ஆசியக் கோப்பைப் போட்டி சம்பவத்தை நான் மறக்கவில்லை. இந்த மைதானத்தில் ஸ்டெரச்சரில் என்னைக் கொண்டு சென்றார்கள். அதே போட்டி, அதே எதிரணி, அதே ஓய்வறை. இன்று சாதித்ததைப் போல உணர்கிறேன். ஏனெனில் மீண்டு வருவதற்கு நான் என்ன செய்தேன், எப்படி வாய்ப்பு பெற்றேன் என்பது அழகான பயணம். நான் முழு உடற்தகுதியை அடைய பலர் உழைத்துள்ளார்கள். அவர்களுக்குப் போதிய கவனம் கிடைக்காது. நிதின் படேல், சோம் தேசாய் ஆகிய இருவரால் தான் நான் மீண்டு வந்து இதுபோல விளையாடுகிறேன். 

கடைசி ஓவரில் ஏழு ரன்கள் அடிப்பது பெரிய கஷ்டமல்ல. நவாஸ், இடக்கை சுழற்பந்து வீச்சாளர், வட்டத்துக்குள் ஐந்து ஃபீல்டர்கள் இருந்தார்கள். வட்டத்துக்கு வெளியே 10 ஃபீல்டர்கள் இருந்திருந்தாலும் வித்தியாசம் இருந்திருக்காது. ஏனெனில் நான் எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை அடிக்க வேண்டும் என்றார்.

2018-ல் துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 18-வது ஓவர் முடிவில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கடைசிப் பந்தை வீசியபோது கீழே விழுந்தார். இதில் இடுப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்துக்கு ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து பாண்டியா விலகினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT