ஆசியக் கோப்பைப் போட்டியில் ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் கடைசி 3 ஓவர்களில் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை வைத்து விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம்? 85 நிமிடங்களுக்கு மேல் வீசப்படும் ஓவர்களின்போது வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தாக வேண்டும் என்கிற விதிமுறை ஜனவரி 2022 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐசிசி விதிமுறைகளின்படி 20 ஓவர்களையும் 85 நிமிடங்களுக்குள் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை நிறுத்தியாக வேண்டும். இதனால் பந்துவீசும் அணிக்குப் பின்னடைவு ஏற்படும். வட்டத்துக்கு வெளியே கூடுதல் வீரர்கள் இருந்தால் தானே ரன்களைத் தடுக்க முடியும், விக்கெட்டுகளை எடுக்க முடியும்?! 2-வது பந்துவீசிய பாகிஸ்தான் அணி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெ.ஆ. டி20 லீக் போட்டியின் பெயர் அறிவிப்பு
டி20 தரவரிசை: முதல்முறையாக 5-ம் இடத்துக்கு முன்னேறிய பாண்டியா
விநாயகர் சதுர்த்தி: வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்
யு.எஸ். ஓபன்: முதல் சுற்றில் பிரபல வீராங்கனை தோல்வி
பிரபல நியூசிலாந்து வீரர் ஓய்வு அறிவிப்பு
யு.எஸ். ஓபன்: முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியன் தோல்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.