முகப்பு
செய்திகள்

ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
பகிர்:

வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 409 ரன்கள் எடுத்தது. இதில் இஷான் 210 ரன்களும், விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். இத்துடன் விராட் கோலி மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து 72வது சதத்தினை நிறைவு செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 44 சதம் எனபதும் குறிப்பிடத்தக்கது.

3 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி ஒருநாள் போட்டியில் சதமடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வரலாற்றில் பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையையும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது. சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

  1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)      - 100 சதங்கள்
  2. விராட் கோலி (இந்தியா)                   - 72 சதங்கள்
  3. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)  - 71 சதங்கள்
  4. குமார் சங்ககாரா (இலங்கை)           - 63 சதங்கள்
  5. ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 62 சதங்கள்
முழு கட்டுரையைப் படிக்க →