முகப்பு
செய்திகள்

பிரிஸ்பேன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்!

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காரணம், ஆடுகளமும் மைதானமும் ஒரே தோற்றத்தில் இருந்ததால் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான நிலையைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணியது ஆஸ்திரேலியா.

அதேபோல தென்னாப்பிரிக்க அணி, 48.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கைல் வெரைன் அதிகபட்சமாக 64 ரன்களும் பவுமா 38 ரன்களும் எடுத்தார்கள். ஆஸி. தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

Advertisement

தென்னாப்பிரிக்காவும் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்குமா? முதல் 3 விக்கெட்டுகளை 27 ரன்களுக்கு வீழ்த்தியது. அதன்பிறகு ஸ்மித்தும் டிராவிஸ் ஹெட்டும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஸ்மித் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 33.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments