இலங்கை அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

DIN

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-4 எனத் தோற்ற இலங்கை அணியில் ஆஷியன் டேனியல் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்தத் தொடரில் காயத்தால் அவதிப்பட்ட அவிஷ்கா, ரமேஷ் மெண்டிஸ், நுவான் துசாரா ஆகிய மூன்று வீரர்களும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாத குசால் பெரேராவும் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. பனுகாவுக்கு இந்தத் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை. 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், வியாழன் அன்று லக்னெள நகரில் தொடங்குகிறது.

இலங்கை அணி

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, தினேஷ் சண்டிமல், தனுஷ்கா குணதிலகா, கமில் மிஷாரா, ஜனித் லியனாகே, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமாரா, பினுரா, ஷிரன், மஹீஸ் தீக்‌ஷனா, ஜெஃப்ரீ, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆஷியன் டேனியல். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT