செய்திகள்

கேப்டன் கே.எல். ராகுல் செய்த தவறு: கவாஸ்கர் விமர்சனம்

இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் தவறான உத்தியால் தெ.ஆ. கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் தவறான உத்தியால் தெ.ஆ. கேப்டன் டீன் எல்கர் அதிக ரன்கள் எடுத்ததாக முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 240 ரன்கள் இலக்கை விரட்டியபோது தெ.ஆ. கேப்டன் எல்கர் 96 ரன்களும் வான் டர் டுசென் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். ஆட்ட நாயகனாக எல்கர் தேர்வானார். 3-வது டெஸ்ட், கேப் டவுனில் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் கோலிக்குப் பதிலாக இந்திய அணியின் கேப்டனாகப் பணியாற்றிய கே.எல். ராகுல் பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விராட் கோலி விளையாடாத டெஸ்டில் இந்திய அணி முதல்முறையாகத் தோற்றுள்ளது. கே.எல். ராகுலைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், டீன் எல்கரின் இன்னிங்ஸில் அவருக்கு ஆரம்பத்தில் சுலபமாக ஒரு ரன்னைப் பலமுறை எடுக்க உதவினார். இதனால் விளையாடுவது எல்கருக்குச் சுலபமாக இருந்தது. ஹூக் ஷாட்டை எல்கர் அவ்வளவாக விளையாட மாட்டார். அதனால் எல்லைக்கோட்டுக்கு அருகே இரு ஃபீல்டர்களை நிற்கவைத்ததில் அர்த்தமில்லை. இதனால் ஒரு ரன்னை அடிக்கடி எடுத்து நிறைய ரன்களை எல்கர் ஸ்கோர் செய்தார். இந்திய அணியின் ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்தியா தோற்றது என்பதை விட 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது என்பதே சரி என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT