செய்திகள்

சேனா நாடுகளில் இந்திய அணி ஜெயிக்குமா?

சேனா நாடுகளில் சமீபகாலமாக விளையாடிய ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்துள்ளது.

DIN

சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (SENA) ஆகிய நாடுகளில் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்துள்ளது இந்திய அணி.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இந்திய அணி சேனா நாடுகளில் சமீபகாலமாக விளையாடிய ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்தில் கடைசியாக 2018-ல் விளையாடிய ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோற்றது. அதன்பிறகு 2020-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் விளையாடிய ஒருநாள் தொடர்களில் முறையே 1-2, 0-3 எனத் தோற்றது. இந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய ஒருநாள் தொடரில் 0-3 எனத் தோற்றது.

அடுத்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுகிறது. அதற்கு முன்பு இந்திய அணி சேனா நாடுகளில் விளையாடும் ஒருநாள் தொடர்களில் வெற்றி பெற வேண்டும், உலகக் கோப்பைப் போட்டிக்குச் சரியான முறையில் தயாராக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சேனா நாடுகளில் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடர்களில்... 

2018-ல் இங்கிலாந்திடம் தோல்வி (1-2)
2020-ல் நியூசிலாந்திடம் தோல்வி (0-3)
2020-ல் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி  (1-2)
2022-ல் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி (0-3)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT