மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் 2025-ல் நடைபெறவுள்ளது.
2013-க்குப் பிறகு இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை 2025-ல் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு வருடங்களில் நான்கு ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 2024-ல் வங்கதேசத்தில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன.
2025-ல் இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி. ஐசிசி மகளிர் போட்டியை இந்தியா 5-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 2013-ல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்தியது. 2025 உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இங்கிலாந்தில் 2026-ல் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 12 அணிகள் பங்கேற்கின்றன. 2026-ல் இலங்கை அணி தகுதி பெற்றால் இலங்கையில் முதல் மகளிர் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி டி20 கிரிக்கெட்டாக நடைபெறும். ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
ஐசிசி மகளிர் போட்டிகளின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.