செய்திகள்

2903: இதற்கும் சேவாக்குக்கும் என்ன தொடர்பு?

மார்ச் 29. என் வாழ்க்கையின் முக்கியமான நாள்.

DIN

இந்திய முன்னாள் வீரர் சேவாக் இரு முச்சதங்கள் அடித்துள்ளார். 

இரு முச்சதங்களுக்கும் மார்ச் 29 என்கிற தேதியுடன் தொடர்பு உண்டு. 

2004-ல் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களுடன் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் சேவாக். 

மார்ச் 29 சேவாக்கை விடுவதாக இல்லை. 

2008-ல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் முச்சதம் அடித்து (மார்ச் 28) சேவாக். அடுத்த நாள் இதே மார்ச் 29 அன்று 319 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்கிற சாதனை இன்னமும் சேவாக் வசமே உள்ளது. டான் பிராட்மேன், பிரையன் லாரா, கிறிஸ் கெயில், சேவாக் என நால்வர் மட்டுமே முச்சதத்தை இருமுறை அடித்துள்ளார்கள். 

மார்ச் 29, முச்சதங்கள் பற்றி ட்விட்டரில் சேவாக் கூறியதாவது:

மார்ச் 29. என் வாழ்க்கையின் முக்கியமான நாள். இந்தத் தேதியில் முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக என்னுடைய முதல் முச்சதத்தை அடித்தேன். இதே தேதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 319 எடுத்து ஆட்டமிழந்தேன். தற்செயலாக என் காருக்கு 2903 என்கிற எண் அமைந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT