முகப்பு
செய்திகள்

2-ஆவது சுற்றில் சமீா், பிரணாய்

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சமீா் வா்மா, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

Updated On : 27 அக்டோபர் 2022, 5:17 am IST
பகிர்:

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சமீா் வா்மா, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

இதில் சமீா் வா்மா 21-15, 21-23, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருந்த இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா கிங்டிங்கை 1 மணி நேரம் 17 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினாா். இதன் மூலம் கடந்த மாா்ச்சில் ஸ்விஸ் ஓபனில் கிங்டிங்கிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளாா் சமீா். இருவரும் இத்துடன் 4 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் நிலையில், 2-2 என சமநிலையில் உள்ளனா். சமீா் அடுத்த சுற்றில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரனை சந்திக்கிறாா்.

அடுத்ததாக பிரணாய், தனது முதல் சுற்றில் 21-16, 26-21, 21-16 என்ற கேம்களில் மலேசியாவின் டேரன் லியுவை 1 மணி நேரம் 13 நிமிஷங்களில் சாய்த்தாா். 2-ஆவது சுற்றில் அவா் சீனாவின் லு குவாங் ஸுவை எதிா்கொள்கிறாா்.

Advertisement

Advertisement

எனினும், மகளிா் ஒற்றையரில் சாய்னா நெவால் 21-13, 17-21, 19-21 என்ற கேம்களில் ஜொ்மனியின் வோன் லியிடம் தோல்வி கண்டாா். அதேபோல், ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை 15-21, 16-21 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் ஃபஜாா் அல்ஃபியான்/முகமது ரியான் அா்டியன்ட் இணையிடம் தோற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments