செய்திகள்

எளிதான கேட்சை நழுவ விட்ட இலங்கை: சதமடித்த நியூசி. வீரர் பிலிப்ஸ்!

DIN

இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது நியூசிலாந்து அணி. 

சிட்னியில் நியூசிலாந்து - இலங்கைக்கு இடையிலான இன்றைய ஆட்டம் மழை பாதிப்பு எதுவுமின்றி சரியான நேரத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 2 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. 

நியூசிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் ஃபின் ஆலனை 1 ரன்னில் போல்ட் செய்தார் தீக்‌ஷனா. பிறகு கான்வே 1 ரன்னிலும் வில்லியம்சன் 8  ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் 4-வது ஓவரின் முடிவில் 15/3 என்கிற பரிதாபமான நிலையில் இருந்தது நியூசிலாந்து. இதன்பிறகு டேரில் மிட்செல்லும் கிளென் பிளிப்ஸும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். 

பிலிப்ஸ் 12 ரன்களில் இருந்தபோது அவர் வழங்கிய எளிதான கேட்சை நழுவ விட்டார் நிசங்கா. இதற்கு இலங்கை அணி பெரிய விலையைக் கொடுத்தது. 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 54 என்கிற பாதுகாப்பான நிலையில் இருந்தது நியூசிலாந்து. 13-வது ஓவர் வரைக்கும் மேலும் விக்கெட் எதுவும் விழாததால் அதிரடியாக விளையாட முடிவெடுத்தார் பிலிப்ஸ். 14-வது ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் கிடைத்தன. டேரில் மிட்செல் 22 ரன்களுக்கு ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். இருவரும் 64 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்கள். பிறகு 61 பந்துகளில் சதமடித்து அசத்தினார் பிலிப்ஸ். கடைசியில் 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT