செய்திகள்

பிசிசிஐக்குப் புதிய விளம்பரதாரர்!

இந்தியாவில் அடுத்த ஒரு வருடத்துக்கு நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களின் விளம்பரதாரராக...

DIN

இந்தியாவில் அடுத்த ஒரு வருடத்துக்கு நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களின் விளம்பரதாரராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

2019-ல் ரூ. 326.80 கோடிக்கு பேடிஎம் நிறுவனம், பிசிசிஐயின் விளம்பரதாரராகத் தேர்வானது. இந்த ஒப்பந்தம் 2023 வரை நீடிக்க இருந்தது. எனினும் கடந்த ஜூலையில் விளம்பரதாரருக்கான உரிமையை மாஸ்டர்கார்ட் நிறுவனத்துக்கு மாற்றி விடுமாறு பேடிஎம் கோரிக்கை விடுத்தது. அதன்படி பிசிசிஐ சார்பாக இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களின் விளம்பரதாரராகத் தற்போது மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளது. இத்தகவலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

இந்தியாவில் 2022-23 பருவத்தில் நடைபெறும் சர்வதேச ஆட்டங்கள் (ஆடவர், மகளிர்), ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள், பிசிசிஐ நடத்தும் ஜூனியர் போட்டிகள் ஆகியவற்றின் விளம்பரதாரராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் செயல்படவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT