செய்திகள்

1000 நாட்களுக்குப் பிறகு சதமடித்த விராட் கோலி, இந்தியா 212 ரன்கள் குவிப்பு

DIN

ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இன்றையப் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். அவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் கடினமாக முயற்சி செய்தும் இவர்களது பார்ட்னஷிப்பை உடைக்க முடியவில்லை. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். 119 ரன்களுக்கு இந்திய அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது. கே.எல்.ராகுல் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதனையடுத்து, விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். இருப்பினும், அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், ரிஷப் பந்த் களமிறங்கினார். 

அரைசதம் கடந்த பிறகு விராட் கோலி ருத்ரதாண்டவம் ஆடினார். மைதானத்தின் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அதிரடியாக ஆடிய அவர் 53 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதன்பின் அவர் எதிர்கொண்ட பந்துகள் அதிக அளவில் பவுண்டரிக் கோட்டினை நோக்கி சென்ற வண்ணமே இருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷப் பந்த் 16 பந்துகளில் 20 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.

இன்றையப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கடந்த 1000 நாட்களுக்கும் மேலாக சதமடிக்கவில்லை என்ற விமர்சனங்களுக்கும் விராட் கோலி முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இன்று அவர் அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவரது 71 சதமாகும். மேலும் இது அவரது முதல் டி20 சதம் எனபதும் குறிப்பிட்டத்தக்கது. 

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு விராட் கோலி சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT