அல்காரஸ் 
செய்திகள்

யார் புதிய நெ.1?: யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்கள்!

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள். 

DIN

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள். 

யு.எஸ். ஓபன் அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த 19 வயது கார்லஸ் அல்காரஸும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவும் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-7 (6/8), 6-3, 6-1, 6-7 (5/7), 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 2005-ல் நடால் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இளம் வீரர் என்கிற பெருமையை அல்காரஸ் அடைந்துள்ளார்.

மற்றொரு அரையிறுதிச்சுற்றில் நார்வேயின் காஸ்பர் ருட், ரஷியாவின் கேரன் கச்சனோவை 7-6 (7/5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்களில் யார் வெற்றி பெற்றாலும் தரவரிசையில் உலகின் நெ.1 வீரர் என்கிற பெருமையை அடைவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்

1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை

காஞ்சிபுரத்தில் புதிய அரசு ஐடிஐ: அமைச்சா்காந்தி திறந்து வைத்தாா்

செப்.15-இல் அண்ணா பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்: மல்லை சத்யா

SCROLL FOR NEXT