செய்திகள்

இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு: தமிழக வீரரைப் பாராட்டும் டிகே!

தமிழக வீரர் பாபா இந்திரஜித் இந்திய அணியில் விரைவில் தேர்வாக வாய்ப்புள்ளது என பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

DIN


தமிழக வீரர் பாபா இந்திரஜித் இந்திய அணியில் விரைவில் தேர்வாக வாய்ப்புள்ளது என பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கோயம்புத்தூரில் துலீப் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர், பாபா இந்திரஜித் ஆகிய இரு தமிழக வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு மண்டல அணி, 63 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களில் 3 சதங்கள், ஒரு அரை சதமெடுத்த இந்திரஜித் (3 ஆட்டங்களில் 396 ரன்கள், சராசரி - 99.00), துலீப் கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார். 

இதையடுத்து இந்திய அணியில் பாபா இந்திரஜித் விரைவில் தேர்வாக வாய்ப்புண்டு என தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

தீவிரமான துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் அபாரமான வீரரிடமிருந்து தரமான சதம். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் என்னவொரு சாதனை. இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கலாம். நன்றாக விளையாடினீர்கள் பாபா இந்திரஜித் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

வார பலன்கள் - ரிஷபம்

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

SCROLL FOR NEXT