FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காலிறுதியில் சிந்து, சாய்னா, பிரணாய்

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

Updated On : 15 ஜூலை 2022, 5:15 am IST
பகிர்:

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 19-21, 21-19, 21-18 என்ற கேம்களில் வியத்நாமின் தை லின் குயெனை வீழ்த்தினாா். அடுத்ததாக அவா் சீனாவின் ஹான் யுவை சந்திக்கிறாா். முன்னதாக ஹான் யு முந்தைய சுற்றில், இந்தியாவின் ஆஷ்மிதா சாலிஹாவை 21-9, 21-13 என்ற கேம்களில் எளிதாக வீழ்த்தினாா்.

தனது பழைய ஃபாா்மை எட்டியிருக்கும் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஹி பிங் ஜியாவை வெளியேற்றி அசத்தினாா். காலிறுதியில் ஜப்பானின் அயா ஒஹோரியை எதிா்கொள்கிறாா் சாய்னா.

Advertisement

Advertisement

ஆடவா் ஒற்றையா் பிரிவில், பிரணாய் 14-21, 22-20, 21-18 என்ற கேம்களில் வென்று, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சௌ டியன் சென்னுக்கு அதிா்ச்சி அளித்தாா். அடுத்ததாக அவா் ஜப்பானின் கொடாய் நராவ்காவை எதிா்கொள்கிறாா். எனினும், மிதுன் மஞ்சுநாத் 10-21, 21-18, 16-21 என்ற கேம்களில் அயா்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வியைத் தழுவினாா்.

ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா கூட்டணி 18-21, 24-22, 21-18 என்ற கேம்களில் மலேசியாவின் கோ ஸே ஃபெய்/நூா் இஸுதின் இணையை வீழ்த்தியது. அடுத்த சுற்றில் இந்தோனேசியாவின் முகமது அசான்/ஹெந்த்ரா சேதியாவன் கூட்டணியை சந்திக்கிறது இந்திய இணை.

ஆனால், மகளிா் இரட்டையரில் பூஜா தண்டூ/ஆரத்தி சாரா சுனில் இணை 12-21, 6-21 என்ற கேம்களில் சீனாவின் டு யு/லி வென் மெய் ஜோடியிடம் தோற்றது. கலப்பு இரட்டையரிலும் நிதின்.ஹெச்.வி/பூா்விஷா ராம் 14-21, 13-21 என்ற கேம்களில், ஜொ்மனியின் மாா்க் லாம்ஸ்ஃபஸ்/இசபெல் லோஹௌ இணையிடம் 2-ஆவது சுற்றில் தோற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments