செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி ஆசியக் கோப்பையில் உதவும்: பாபர் அசாம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதற்கு உந்துதலாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதற்கு உந்துதலாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுவதற்கு உந்துதலாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் ஆசியக் கோப்பையில் விளையாடுவதை எதிர்நோக்கி ஆவலாக உள்ளோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியாக இருக்கும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி எளிதானதாக இருக்கவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர்களை எதிர்கொள்வது மிகக் கடினம். இந்த ஒருநாள் தொடரில் கிடைத்த வெற்றி ஆசியக் கோப்பையில் சிறப்பாக வெற்றிப் பயணத்தை தொடர உதவியாக இருக்கும். எங்களது ரசிகர்களுக்காக சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT