செய்திகள்

2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி! 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

DIN

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 262 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே கவாஜா ஜடேஜா பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசேன் சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்த ஜோடி வீழ்ந்தது ஆஸி. அணியே தடுமாறியது.

ஹெட் 43 ரன்களும், லபுசேன் 35 ரன்களும் எடுத்தனர். மற்ற 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித்-9, கவாஜா-6, ரென்ஷா-2, ஹேன்ஸ்கோம்ப்-0, அலெக்ஸ் கேரி-7, கம்மின்ஸ்-0, லயன் -8, மர்ஃபி-3, குஹென்மன் -0. 

ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 113 ரன்களுக்கு ஆஸி. அணி சுருண்டது. 114 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.  

115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.4 ஓவரில் 118/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் அதிரடியாக 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். புஜாரா 31 ரன்களும், பரத் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 

லயன் 2 விக்கெட்டுகளும், மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தனர். 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகித்துள்ளது. 

மீதமுள்ள 2 போடிகளில் ஆஸி. வென்றாலும் இந்தியாவிடம்தான் கோப்பை இருக்கும். தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு

தமிழகத்தில் 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அன்பில் மகேஸ்

வனப் பகுதிக்குள் சுற்றுலா அழைத்துச் சென்ற எஸ்டேட் நிா்வாகத்துக்கு அபராதம்

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT