செய்திகள்

ஜிம்பாப்வே டி20 அணியில் இங்கிலாந்து வீரர்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த கேரி பேலன்ஸ், 2013 முதல் 2017 வரை இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். சிறுவயது முதல் இங்கிலாந்தில் வாழ்ந்ததால் அங்கேயே கிரிக்கெட்டைப் பயின்று பிறகு இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்தார். (எனினும் 2006 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார். ) 

கவுன்டி கிரிக்கெட்டில் நிறவெறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் தற்போது ஜிம்பாவே அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளார் பேலன்ஸ். ஐசிசி விதிமுறைகளின்படி வெவ்வேறு நாடுகளின் அணிகளில் ஒரு வீரர் இடம்பெறுவதற்கு மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும். அதன்படி தற்போது ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடனான இரு வருட ஒப்பந்தத்தில் 33 வயது பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐஎல்டி20 போட்டியில் விளையாடுவதால் ஜிம்பாப்வே அணியில் சிகந்தர் ராஸா இடம்பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT