செய்திகள்

உலக சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

DIN

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில். 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் 72 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 4-வது ஒருநாள் சதம். கடந்த 4 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட மூன்று சதங்களை எடுத்துள்ளார். ஷுப்மன் கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பாபர் ஆஸமின் சாதனையை சமன் செய்துள்ளார் ஷுப்மன் கில். இருவரும் தலா 360 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்கள்.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள்

360 - பாபர் ஆஸம் vs மே.இ. தீவுகள்
360 - ஷுப்மன் கில் vs நியூசிலாந்து
349 - இம்ருல் கைஸ் vs ஜிம்பாப்வே
342 - குயிண்டன் டி காக் vs இந்தியா
330 - மார்டின் கப்தில் vs இங்கிலாந்து 

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்கள்

360 - ஷுப்மன் கில் v நியூசிலாந்து, 2023
357 - விராட் கோலி, ஆசியக் கோப்பை, 2012
283 - ஷிகர் தவன் v இலங்கை, 2014
283 - விராட் கோலி v இலங்கை, 2023
273 - ரோஹித் சர்மா v இலங்கை, 2014

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT