முகப்பு
செய்திகள்

ஆஷஸ் தொடர்: முதல் வெற்றியைப் பதிவு செய்தது இங்கிலாந்து!

ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

லீட்ஸ் நகரில் நடந்த ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பௌலிங்கில் மாா்க் வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 224 ரன்னில் ஆட்டமிழக்க, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. எனினும் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து அபார வெற்றிப்பெற்றது. 

நிதானமாக விளையாடிய ஹாரி ப்ரூக் 75 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொரில் முதல் வெற்றியை இங்கிலாந்து பதிவு செய்திருப்பதால் இனி எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இருப்பினும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்கிற புள்ளிகளில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →