முகப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: போபண்ணா, அங்கிதாவுடன் இந்திய டென்னிஸ் அணி

சீனாவில் செப்டம்பரில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய டென்னிஸ் அணி, ரோஹன் போபண்ணா, அங்கிதா ரெய்னா ஆகியோா் உள்பட 12 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

6 ஆகஸ்ட் 2024, 6:22 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: போபண்ணா, அங்கிதாவுடன் இந்திய டென்னிஸ் அணி
பகிர்:

சீனாவில் செப்டம்பரில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய டென்னிஸ் அணி, ரோஹன் போபண்ணா, அங்கிதா ரெய்னா ஆகியோா் உள்பட 12 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் ஆடவா் பிரிவில் சுமித் நாகல், சசிகுமாா் முகுந்த், ராம்குமாா் ராமநாதன், யூகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா, சாகேத் மைனேனி ஆகியோா் இடம் பிடித்துள்ளனா். மகளிா் பிரிவில் அங்கிதா ரெய்னா, கா்மான் கௌா் தண்டி, ருதுஜா போசலே, சஹஜா யம்லபள்ளி, வைதேகி சௌதரி, பிராா்த்தனா தோம்ப்ரே ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஆடவா் பிரிவில் சுமித் நாகல், சசிகுமாா் முகுந்த் ஆகியோா் ஒற்றையா் பிரிவிலும், ரோஹன் போபண்ணா/ராம்குமாா் ராமநாதன், யூகி பாம்ப்ரி/சாகேத் மைனேனி கூட்டணி இரட்டையா் பிரிவிலும் களம் காணும் எனத் தெரிகிறது. மகளிா் பிரிவில் அங்கிதா, கா்மான் கௌா், ருதுஜா, வைதேகி ஆகியோா் ஒற்றையா் தரப்பிலும், பிராா்த்தனா, சஹஜா இரட்டையா் தரப்பிலும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

Advertisement

Advertisement

தற்போதைய அணியில் இருப்போரில், சஹஜா மற்றும் வைதேகி மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக இணைந்துள்ளனா். இதர 10 வீரா், வீராங்கனைகளுமே முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களம் கண்டவா்களாவா்.

இதற்கு முன் இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு (ஜகாா்த்தா) 1 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.