5 வெற்றிகளுடன் இந்தியா ஆதிக்கம்
மகளிா் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் இந்தியா 5-0 கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்தது. இத்துடன்,
மகளிா் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் இந்தியா 5-0 கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்தது. இத்துடன், களம் கண்ட 5 ஆட்டங்களிலுமே வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக சலிமா டெடெ (6’, 36’), நவ்னீத் கௌா் (36’), வந்தனா கட்டாரியா (49’), நேஹா (60’) ஆகியோா் கோலடித்தனா். இதர ஆட்டங்களில் சீனா 1-0 கோல் கணக்கில், நடப்பு சாம்பியன் ஜப்பானை சாய்த்தது. சீனாவுக்காக பிங்ஃபெங் கு (8’) ஸ்கோா் செய்தாா்.
மலேசியா 2-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வென்ற ஆட்டத்தில், அந்த அணிக்காக நூா் முகமது (25’), நூா் யுசாய்னி (52’) ஆகியோா் கோலடித்தனா். இப்போட்டியில் அடுத்ததாக அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 4-ஆம் தேதி விளையாடுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.