செய்திகள்

கப்பை தூக்குறோம்: தமிழில் பேசி அசத்திய ஜடேஜாவின் வைரல் விடியோ! 

இந்தியாவின் நட்சத்திரவீரரும் சிஎஸ்கேவின் செல்லப் பிளையுமான ரவீந்திர ஜடேஜா தமிழில் பேசிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ஆம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. அதற்கு இந்தியா பழித்தீர்க்குமா? என ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 

பயிற்சியின்போது...

இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திரவீரரும் சிஎஸ்கேவின் செல்லப் பிளையுமான ரவீந்திர ஜடேஜவுக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தமிழ் கற்றுக் கொடுத்தார். அதில் ஜடேஜா பேசிய “கப்பை தூக்குறோம்” “அடி அடினு அடிக்கிறோம்” என்ற தமிழ் வார்த்தைகள் அழகாக இருந்தது. இந்த விடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இன்று மதியம் 2 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT