செய்திகள்

சதமடிக்க தவறிய ஆப்கன் வீரர்! 

உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஜ் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். 

DIN

கடந்த அக்.5ஆம் தேதி முதல்  உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13வது போட்டியாக இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் விளையாடி வருகின்றன. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வந்த ரஹ்மானுல்லா குர்பாஜ் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி சதம் அடிக்காமல் வெளியேறினார். 

72 பந்துகளில் ஆப்கனின் கரிம் சதிக்கும் 85 பந்துகளில் மொஹமத் ஷாஜத்தும் சதமடித்துள்ளார்கள். இவர்கள் சாதனை முறியடிக்க குர்பாஜ் தவறிவிட்டார்.

சாம்பியன் அணியான இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை குர்பாஜ் துவம்சம் செய்தார். 57 பந்துகளில் 80 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். 

23 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 135/3 ரன்கள் எடுத்துள்ளது. ஷாகிதி, ஓமர்ட்ஜாய் தலா 6 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். குர்பாஜ்-80, இப்ரஹிம் ஜார்டன் - 28, ரஹ்மத் ஷா-3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT