படம் : ட்விட்டர் | ஐசிசி 
செய்திகள்

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்த சிராஜ்: தடுமாறும் இலங்கை (13/6)

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் இந்திய வேகப் பந்து வீச்சாளர் சிராஜ். 

DIN

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

மழையின் காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. 4வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் முதல் பந்தில் நிசாங்கா ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து 3,4வது பந்துகளில் சமரவிக்ரமா, அசலங்கா ஆட்டமிழந்தனர். அடுத்து கடைசிப் பந்திலும் தன்ஞ்செயாவும் டக்கவுட் ஆனார். 4 வீரர்கள் ரன்னேதுமின்றி ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 4வது ஓவர்: விக்கெட், ரன் இல்லை, விக்கெட், விக்கெட், பவுண்டரி, விக்கெட். 

அடுத்து 6வது ஓவர் வீசிய சிராஜ் ஓவரில் இலங்கை கேப்டன் ஷானகா போல்ட்டானார். நிசாங்கா-2 ரன்கள், தனஞ்செய டி செல்வா-4 ரன்கள், குசால் பெராரே- 0, அசலங்கா-0, சதீரா சமரவிக்ரமா-0, ஷானகா-0. 

6 ஓவர் முடிவில் இலங்கை அணி 13/6 ரன்கள் எடுத்துள்ளது. சிராஜ் 5 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT