அஸ்வின் படங்கள்: இன்ஸ்டா / திண்டுக்கல் டிராகன்ஸ்
செய்திகள்

சிஎஸ்கே உடை அணிந்து சேப்பாக்கம் வருகிறோம்: ஆட்ட நாயகன் அஸ்வின் பேச்சு!

டிஎன்பிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 2க்கு முன்னேறியுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

DIN

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 72, ஜெகதீஷன் 25, அபிஷேக் தன்வர் 22 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதமடித்து 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். விருது வாங்கியபின் அஸ்வின் பேசியதாவது:

திண்டுக்கல் மைதானத்தில் ரசிகர்கள் நல்ல ஆதரவு அளித்தார்கள். அடுத்து சேப்பாக்கில் நடைபெறும் போட்டிக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் என்று கேள்விபட்டேன். பொதுவாக சிஎஸ்கே போட்டிக்கு மட்டுமே இப்படி நடக்கும். நாங்களும் சிஎஸ்கே மாதிரி ஜெர்ஸி அணிந்து சேப்பாக்கம் வருகிறோம். எங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் மட்டமான பௌலிங், ஃபீல்டிங் செய்தோம். ஆனாலும் போட்டியில் இறுதி வரைக்கும் வந்தோம். சர்வதேச, ஐபிஎல் விளையாடும் வீரராக நான் பேட்டிங்கில் நன்றாக விளையாட வேண்டுமென்ற பொறுப்பு இருந்தது. முழுவதும் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. அடுத்த போட்டியில் அதை சரிசெய்வோமென நம்புகிறேன் என்றார்.

குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஆக.2ஆம் தேதி சென்னை சேப்பாக் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT