செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி; இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்!

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும்  ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. 

பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸான் அவாய்ஷ் மற்றும் அராஃபாத் மின்ஹாஸ் தலா 52 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்டிரேக்கர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹாரி டிக்ஸான் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஆலிவர் பீக் 49 ரன்கள் எடுத்தார்.  மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். இதனால் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு இக்கட்டான சூழல் உருவானது. 164 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 16 ரன்களும், பாகிஸ்தான் வெற்றி பெற ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 3  ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருப்பினும், ஆட்டத்தின் இறுதி ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலிய வீரர் பவுண்டரிக்கு விரட்ட ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

ஆஸ்திரேலிய அணி வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடிப்பா்: எம்எல்ஏ வானதி சீனிவாசன்

மேம்பாலத்தின் அணுகுசாலையில் வெடிப்பு: தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

SCROLL FOR NEXT