முகப்பு
செய்திகள்

டி20 தொடருக்காக ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்ட இளம் இந்திய அணி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இளம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்டது.

Updated On : 2 ஜூலை, 2024 at 8:11 AM
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இளம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்டது.

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூலை 6 முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்காக இளம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஜிம்பாப்வே டி20 தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் அணியுடன் ஜிம்பாப்வே சென்றடைந்தார். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் பிடிக்கலாம்.

கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் பெரில் சூறாவளியால் பார்படாஸில் சிக்கியுள்ள இந்திய வீரர்களான ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது அணியுடன் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →