துஷார் தேஷ்பாண்டே படம் | பிசிசிஐ
செய்திகள்

4-வது டி20: இந்தியா பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டே அறிமுகம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுக வீரராக களமிறங்குகிறார். இன்றையப் போட்டியில் ஆவேஷ் கான் அணியில் இல்லை.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணி களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் டி20 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

தொடர் வெற்றிகள்.. டி20 உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்த இந்திய அணி!

விராட் கோலி சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி! தமிழ்நாடு முழுவதும் முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைப்பு!!

ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்... ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT