FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

17 பதக்கங்களை வென்று அசத்திய பாரா தடகள வீரர்கள்: பிரதமர் பாராட்டு!

உலக பாரா தடகளப் போட்டியில் இந்திய அணி 17 பதக்கங்களை வென்று சாதனை: பிரதமர் பாராட்டு!

27 மே 2024, 10:32 pm
உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிஷாத் குமார் - படம் | இந்திய விளையாட்டு ஆணையம் எக்ஸ் தளப் பதிவு
பகிர்:

உலக பாரா தடகளப் போட்டியில் 6 தங்கத்துடன் மொத்தம் 17 பதக்கங்களைக் கைப்பற்றியது இந்தியா.

ஜப்பானின் கோபே நகரில் உலக பாராலிம்பிக் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. அதில் சீனா 33 தங்கத்துடன் 87 பதக்கங்களுடன் முதலிடமும், பிரேசில் 19 தங்கத்துடன் இரண்டாம் இடத்தையும், 7 தங்கத்துடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

Advertisement

Advertisement

6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 17 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தைக் கைப்பற்றியது. உயரம் தாண்டுதல் போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தடகள விளையாட்டு வீரா் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு 1.88 மீட்டா் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

இந்த வெற்றிகளால் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியிலும் இந்தியா அதிக பதக்கங்களை குவிக்கலாம் என நம்பிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து, பாரா தடகள வீரர்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ்(டிவிட்டர்) தளப் பதிவில், பாரா தடகள அணி, ஏழே ஆண்டுகளில் 34வது இடத்திலிருந்து 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பாரா தடகள வீரர்களின் அர்ப்பணிப்பும், தொடர் முயற்சியும் உத்வேகமளிக்கிறது. அவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ்(டிவிட்டர்) தளப் பதிவில், பாரா தடகள அணிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். அவர்கள் தேசத்திற்காக மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.