தமிழ் தலைவாஸ் அணியினர்.  படம்: எக்ஸ் / தமிழ் தலைவாஸ்
செய்திகள்

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறியுள்ளது.

புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறைக்கூட கோப்பை வென்றதில்லை என்பதால் இந்தமுறை மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.

முதல் போட்டியில் வென்ற தமிழ் தலைவாஸ் அடுத்த 2 போட்டிகளில் தோற்றது. கருத்து வேறுபாடு காரணமாக புதிய கேப்டன் பவன் செராவத் அணியிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் 46-36 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.

ரெய்டு மூலம் 25 புள்ளிகள், டேக்கிள் மூலம் 15 புள்ளிகள், ஆல் அவுட் மூலம் 4 புள்ளிகள், எக்ஸ்ட்ரா 2 புள்ளிகள் என மொத்தம் 46 புள்ளிகள் பெற்று அசத்தியது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறி 6ஆவது இடம் பிடித்துள்ளது.

Tamil Thalaivas team won in the Pro Kabaddi League by scoring 46 points.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

SCROLL FOR NEXT