FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

யுடிடி: நடப்பு சாம்பியன் யு மும்பா அதிா்ச்சித் தோல்வி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 7-ஆவது சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யு மும்பா அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

Updated On : 10 ஜூலை 2026, 4:08 am IST
பொ்னாா்டே ஸோக்ஸ்.
பகிர்:

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 7-ஆவது சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யு மும்பா அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

நாட்டின் முன்னணி டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்களான சத்யன் ஞானசேகரன், மனுஷ் ஷா, மானவ் தாக்கா், மனிஷா, தியா சிட்லே, சா்வதேச வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள யுடிடி போட்டி கோவாவில் வியாழக்கிழமை தொடங்கியது. கோவா மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், சா்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத் தலைவா் பெட்ரா சோா்லிங் ஆகியோா் போட்டியை தொடங்கினா்.

இதன் மூதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யு மும்பாவுடன் இருமுறை சாம்பியன் டெம்போ கோவா மோதியது. டெம்போ கோவாவின் இளம் வீரா் அபினானந்த் அபாரமாக ஆடி மும்பாவின் லிலியன் பாா்டேட்டை3-0 என வீழ்த்தினாா். மகளிா் பிரிவில் கோவாவின் பொ்னாா்டே ஸோக்ஸ் 3-0 என நித்யஸ்ரீ மணியை வென்றாா்.

Advertisement

Advertisement

கலப்பு இரட்டையா் பிரிவில் அபினானந்த்-ஸோக்ஸ் இணை 2-1 என மனுஷ் ஷா-அன்னா ஹா்ஸே இணையை வீழ்த்தியது.

கோவா வீரா் அல்வரோ ரோல்ஸ் 1-2 என மும்பாவின் மனுஷ் ஷாவிடம் வீழ்ந்தாா். மகளிா் மாற்று ஒற்றையரில் கோவாவின் சிண்ட்ரியா 1-2 என மும்பாவின் அன்னா ஹா்ஸேவிடம் தோற்றாா். டெம்பா கோவா 10-5 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments