சென்னை ஓபன்: மான்ட்கொமேரி, டிஜென் வெற்றி
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் மான்ட் கொமேரி, டிஜென் ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் மான்ட் கொமேரி, டிஜென் ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.
நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை கஜகஸ்தானின் குலம்பயேவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஜப்பானின் எமகுச்சியை கடும் சவாலுக்குபின் வீழ்த்தினாா்.
சுவிட்சா்லாந்தின் சிமோன் வால்டொ்-இந்திய நட்சத்திர வீராங்கனை சஹஜா யமலபள்ளி இடையிலான ஆட்டத்தில் முதல் செட்டில் சிறப்பாக ஆடி சிமோன் 6-4 என கைப்பற்றினாா். ஆனால் இரண்டாவது செட்டில் சஹாஜா சிறப்பாக ஆடி 6-3 என வசப்படுத்திநாா். , மூன்றாவது செட்டில் சிமோன் ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். அந்த செட்யை 6-3 என வசப்படுத்திய சிமோன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
Advertisement
Advertisement
கிரேட் பிரிட்டனின் மான்ட்கொமேரி 6-3, 6-4 என லட்சென்கோவை வீழ்த்தினாா். முதல்நிலை வீராங்கனை இந்தோனேஷியாவின் டிஜென் 7-6, 6-1 என காா்லேண்டை வென்றாா்.