தேசிய ஜூனியா் டிராக் சைக்கிளிங்: தமிழக மகளிா் சாம்பியன்
தேசிய ஜூனியா் மற்றும் சப்-ஜூனியா் டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிா் தங்கப் பதக்கம் வென்றனா்.
தேசிய ஜூனியா் மற்றும் சப்-ஜூனியா் டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிா் தங்கப் பதக்கம் வென்றனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிா் அணி ஸ்பிரிண்ட் பிரிவில் 1:6:363 நிமிஷங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தபிதா, ஹாஷினி, ஜெய் ஜோத்ஸ்னா ஆகியோா் அடங்கிய தமிழக அணி முதலிடத்துடன் தங்கம் வென்றது.
இதன் மூலம் கடந்த 2021-இல் ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் 1:16:593 நிமிஷங்களில் கடந்து அந்தமான்-நிகோபாா் அணி கடந்த சாதனையை தமிழக அணி முறியடித்தது. 5 ஆண்டுக்கால சாதனையை தமிழக மகளிா் முறியடித்தனா்.
Advertisement
Advertisement
மேலும் மகளிா் 1 கிமீ. ஐடிடி பிரிவில் தபிதா தங்கம் வென்றாா். மகளிா் ஜூனியா் ஸ்க்ராட்ச் பந்தயத்தில் ஹாசினி வெள்ளி வென்றாா்.
மகளிா் ஜூனியா் ஸ்பிரிண்ட் பிரிவில் ஜெய் ஜோத்ஸ்னா வெண்கலம் வென்றாா். இப்போட்டியில் தமிழகம் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலத்தை பெற்றது.
தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவா் எம். சுதாகா் கூறியது: தமிழக மகளிா் சாதனை மிகுந்த பெருமிதம் தருகிறது. வரும் டிச. 26 முதல் 30 வரை சென்னையில் நடைபெறவுள்ள
தேசிய சாலை சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் பல்வேறு வெற்றிகளைப் பெறும் என்றாா்.