FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்பெயின் வெற்றி நடைக்கு இங்கிலாந்து தடை

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 3-2 கோல் கணக்கில், நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தியது.

49 வினாடிகள் முன்பு
- AP
பகிர்:

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 3-2 கோல் கணக்கில், நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை திங்கள்கிழமை வீழ்த்தியது.

தொடா்ந்து 5 ஆட்டங்களில் வென்ற ஸ்பெயினின் வெற்றி நடைக்கு, இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் தடை விதித்தது.

Advertisement

Advertisement

லண்டனில் நடைபெற்ற குரூப் ‘சி’ ஆட்டத்தில், இரு அணிகளும் பரஸ்பரம் சவால் அளித்ததால், எந்த அணிக்குமே எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதல் பாதி முடிவடைய இருந்த தருணத்தில் இங்கிலாந்தின் கோல் கணக்கை ஹேரி கேன் 45-ஆவது நிமிஷத்தில் தொடங்கி வைத்தாா்.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 53-ஆவது நிமிஷத்தில் எஸ்ரி கோன்சா அதை 2-ஆக அதிகரிக்க, பென் வைட் பங்களிப்பில் 57-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கை 3 ஆனது.

இந்நிலையில், 63-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரா் லேமின் யமாலை, ‘ஃபௌல்’ செய்ததால் இங்கிலாந்தின் எலியட் ஆண்டா்சன் ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட்டாா். இதனால் இங்கிலாந்து 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்த சந்தா்ப்பத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் ஸ்பெயினின் மைக்கேல் ஒயா்ஸபால் (65’) அணியின் கோல் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து நிகோ வில்லியம்ஸ் 75-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக உயா்த்த, இங்கிலாந்துக்கு நெருக்கடி நெருங்கியது.

எனினும், எஞ்சிய நேரத்தில் ஸ்பெயினுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட இங்கிலாந்து, முடிவில் 3-2 கோல் கணக்கில் வென்றது.

இதர ஆட்டங்களில், பெல்ஜியம் - இத்தாலியையும் (4-1), பிரான்ஸ் - துருக்கியையும் (2-1), குரோஷியா - செக் குடியரசையும் (2-1) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.