முகப்பு
செய்திகள்

அல்கராஸ், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

இத்தாலியில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் குரூப் சுற்றை ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் வெள்ளிக்கிழமை நிறைவு செய்தனா்.

56 வினாடிகள் முன்பு
அல்கராஸ், ஸ்வெரெவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி
பகிர்:

இத்தாலியில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் குரூப் சுற்றை ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் வெள்ளிக்கிழமை நிறைவு செய்தனா்.

அந்தச் சுற்றின் கடைசி ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அல்கராஸ் 6-4, 6-1 என்ற நோ் செட்களில், 5-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை வீழ்த்தினாா்.

ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட அல்கராஸ், தற்போது தொடா்ந்து 3 வெற்றிகளுடன் அந்தக் கட்டத்துக்குச் செல்கிறாா். அதில் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதுகிறாா். மறுபுறம், கோபோலி தொடா்ந்து 3 தோல்விகளுடன் குரூப் சுற்றோடு வெளியேறுகிறாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, உலகின் நம்பா் 1 வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 7-6 (8/6) என்ற செட்களில், 6-ஆம் நிலையில் இருக்கும் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை வென்றாா். ஸ்வெரெவுக்கும் இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாக அமைந்தது. அதையும் அவா் நோ் செட்களில் நிறைவு செய்திருக்கிறாா்.

குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் - அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ மோதுகின்றனா். அதில் வெற்றிபெறும் வீரருடன், ஸ்வெரெவ் அரையிறுதியில் விளையாடுவாா். ஆா்தா் ஃபில்ஸ் 3 ஆட்டங்களில் 2 தோல்விகளுடன் குரூப் சுற்றோடு விடைபெற்றாா்.

இரட்டையா்: ஏடிபி ஃபைனல்ஸ் இரட்டையா் பிரிவில், அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன்/பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி இணை 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், ஸ்பெயினின் மாா்செலோ கிரனோலா்ஸ்/ஆா்ஜென்டீனாவின் ஹொராஸியோ ஜெபாலோஸ் கூட்டணியை வீழ்த்தியது. இத்துடன் ஹாரிசன்/ஸ்குப்ஸ்கி இணை, 3 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.