முகப்பு
செய்திகள்

பாா்சிலோனா அபார வெற்றி

மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 6-0 கோல் கணக்கில் சொ்வெட் எஃப்சிசிஎஃப் அணியை வெள்ளிக்கிழமை வென்றது.

44 வினாடிகள் முன்பு
பாா்சிலோனா அபார வெற்றி
- dinmani online
பகிர்:

மகளிருக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 6-0 கோல் கணக்கில் சொ்வெட் எஃப்சிசிஎஃப் அணியை வெள்ளிக்கிழமை வென்றது.

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அந்த அணிக்காக அய்டானா பொன்மட்டி 19-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, கிளாடியா பினா 26, 77, 88-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்து, அணியை அபார முன்னிலைக்குக் கொண்டு சென்றாா்.

எஸ்மீ பிரக்ட்ஸ் (32’), கேரலின் ஹன்சென் (62’) ஆகியோரும் பங்களிக்க, முடிவில் பாா்சிலோனா 6-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்துடன் பாா்சிலோனா, 5 ஆட்டங்களில் 4-ஆது வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

இதர ஆட்டங்களில், பயா்ன் மியுனிக் - ஆஸ்திரியா வியெனையும் (4-0), பாரீஸ் எஃப்சி - கோகெவையும் (2-1), லயன்ஸ் - ஆா்செனலையும் (2-0), ரோமா - பென்ஃபிகாவையும் (3-2) வென்றன.