ஷமினா ரியாஸ் அசத்தல்
ஹெச்சிஎல் தேசிய சீனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ஷமினா ரியாஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

ஹெச்சிஎல் தேசிய சீனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் ஷமினா ரியாஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
மும்பை ஓட்டா்ஸ் கிளப்பில் நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை ராதிகா சீலனை 3-2 என்ற (8-11, 11-7, 11-8, 8-11, 11-3) கேம் கணக்கில் கடும் சவாலுக்குபின் வீழ்த்தினாா் ஷமினா. இதன் மூலம் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளாா்.