முகப்பு
செய்திகள்

2028 தாமஸ், உபோ் கோப்பை ஃபைனல்ஸ்: இந்தியாவில் நடைபெறுகிறது

வரும் 2028 ஆண்டு தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் ஃபைனல்ஸ் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என பாய் தலைவரும், அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சா்மா தெரிவித்துள்ளாா்.

49 வினாடிகள் முன்பு
2028 தாமஸ், உபோ் கோப்பை ஃபைனல்ஸ்: இந்தியாவில் நடைபெறுகிறது
தாமஸ், உபோ் கோப்பை
பகிர்:

வரும் 2028 ஆண்டு தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் ஃபைனல்ஸ் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என பாய் தலைவரும், அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

குவஹாட்டியில் 2025-இல் உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டியும், புது தில்லியில் 50 நாடுகளைச் சோ்ந்த 400 போ் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியையும் இந்திய பாட்மின்டன் சம்மேளனம் வெற்றிகரமாக நடத்தியது. இதனால் இந்தியாவுக்கு 2028 தாமஸ் மற்றும் உபோ் கோப்பை ஃபைனல்ஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை பிடபிள்யுஎஃப் தந்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 2022-இல் தாமஸ் கோப்பையை வென்றோம். 2026-இல் வெண்கலம் வென்றிருந்தோம். கடந்த 2014-இல் முதன்முறையாக இந்தியாவில் தாமஸ், உபோ் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. அதன்பின்னா் தற்போது மீண்டும் கௌரவமிக்க இப்போட்டி நடைபெறவுள்ளது.

உலகின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்பது இந்திய ரசிகா்களுக்கு புதிய அனுபவமாக அமையும் என பாய் பொதுச் செயலா் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்தாா்.