FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+2’) கோல் அடித்த கொலம்பஸ்..! தொடரிலிருந்து இன்டர் மியாமி வெளியேற்றம்!

எம்எல்எஸ் கோப்பைக்கான போட்டியில் இருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன் இன்டர் மியாமி குறித்து...

ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+2’) கோல் அடித்த கொலம்பஸ்..! தொடரிலிருந்து இன்டர் மியாமி வெளியேற்றம்!
மியாமி தோல்வி; வெற்றிக் களிப்பில் கொலம்பஸ் அணி வீரர்கள். - படங்கள்: எக்ஸ் / இன்டர் மியாமி, கொலம்பஸ் க்ரூ.
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கோப்பைக்கான போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் இன்டர் மியாமி வெளியேறியது. கொலம்பஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்று அதிகாலை கொலம்பஸ் அணி தனது சொந்த மண்ணில் இன்டர் மியாமி உடன் மோதியது. இந்தப் போட்டியில் 0-1 என இன்டர் மியாமி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்தப் போட்டி 90 நிமிஷங்களுக்கு இரு அணிகளுமே கோல்கள் அடிக்காமலேயே இருந்தன. பின்னர் ஸ்டாப் பேஜ் நேரத்தில் 90+2ஆவது நிமிஷத்தில் சாண்டியாகோ ரோட்ரிகஸ் கோல் அடித்து அசத்தினார்.

Advertisement

Advertisement

முன்னதாக முதல் பிளே ஆஃப் போட்டியில் கொலம்பஸ் அணி மியாமியை 3-0 என வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியிலும் மியாமி தோல்வியுற்றதால், தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த கொலம்பஸ் அணி இரண்டாமிடத்தில் இருந்த மியாமியை வீழ்த்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் 52 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த இன்டர் மியாமி அணி 10 ஷாட்டுகளில் 3 முறை இலக்கை நோக்கி அடித்தது. அதனை கொலம்பஸ் கோல்கீப்பர் அற்புதமாக தடுத்து அசத்தினார்.

கடைசி இரண்டு பிளே ஆஃப் போட்டியிலும் மெஸ்ஸி ஒரு கோல்கூட அடிக்காதது கவனிக்கத்தக்கது. நடப்பு சீசனில் அதிக கோல் அடித்த வீரராக தங்கக் காலணி வென்றதும் நினைவுகூரத்தக்கது.

summary

Crew oust Lionel Messi and defending champion Inter Miami with 1-0 victory behind Schulte, Rodriguez

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.