நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ன் நிறைவு விழாவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை குறித்து...
ஜப்பானில் நடைபெற்றுவந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. இதில் இந்தியாவின் சார்பாக நீரு தண்டா தேசிய கொடி ஏந்தி வலம் வந்தார்.
ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி அக்.4ஆம் தேதி முடிவடைந்தது.
இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்கள்.
Advertisement
Advertisement
இந்தியாவின் சார்பாக துப்பாகி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார். தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற இவர், மகளிரணி பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தினார்.
தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார். மொத்தமாக இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் உள்பட 85 பதக்கங்கள் வென்றன.
பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது. சீனா முதலிடமும் ஜப்பான் இரண்டாமிடமும் தென் கொரியா மூன்றாமிடமும் பிடித்து அசத்தின.
இந்தியா சார்பாக நீரு தண்டா தேசிய கொடி ஏந்தி நிறைவு விழாவில் பங்கேற்றார். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2030ல் தோஹாவில் நடைபெற இருப்பதால் அதன் கொடியை ஆசிய ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் சேக் ஜோன் பின் ஹமது அல் தானி கத்தார் அதிகாரிகளிடம் வழங்கினார்.
Neeru Dhanda proudly carries the Indian Tricolour as India’s flag-bearer at the Aichi-Nagoya Asian Games Closing Ceremony!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.