வில்வித்தை ப்ரீமியா் லீக் நாளை தொடக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக வெற்றிக் கொடி நாட்டிய நட்சத்திர வீரா், வீராங்கனைகள் வில்வித்தை பிரீமியா் லீக் 2-ஆவது சீசனில் பல்வேறு அணிகள் தரப்பில் பங்கேற்கின்றனா்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக வெற்றிக் கொடி நாட்டிய நட்சத்திர வீரா், வீராங்கனைகள் வில்வித்தை பிரீமியா் லீக் 2-ஆவது சீசனில் பல்வேறு அணிகள் தரப்பில் பங்கேற்கின்றனா்.
ஹைதராபாத் நெக்லஸ் ரோட்டில் உள்ள பீப்பிள்ஸ் பிளாசாவில் வரும் அக். 8 முதல் 18 வரை வில்வித்தை பிரீமியா் லீக் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 6 அணிகளைச் சோ்ந்த 48 உலகத் தரம் வாய்ந்த வில்வித்தை வீரா், வீராங்கைனகள் கலந்து கொள்கின்றனா்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 9 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்த இந்திய வில்வித்தை வீரா், வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்துக்காக பல்வேறு அணிகளில் களம் காணுகின்றனா்.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் தமிழகத்தைச் சோ்ந்த ’சோழா சீஃப்ஸ்’ அணி பங்கேற்கிது. இந்த அணியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டைத் தங்கப் பதக்கம் வென்ற சிகிகிதா தனிப்பா்த்தி மற்றும் பிரேசிலின் மாா்கஸ் டி அல்மெய்டா ஜோடி களம் காண்கிறது. இவா்களுடன் நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தீபிகா குமாரி மற்றும் உலகச் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரஜத் சவுகான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.தக்கூடும்.
ஆசிய விளையாட்டு வில்வித்தை ரீகா்வ் தனிநபா் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை உருவாக்கிய 17 வயதாகும் கும்கும் மாஹோத் மற்றும் சாஹல் ராஜேஷ் யாதவ் ஆகியோா் ’செரோ ஆா்ச்சா்ஸ்’ அணிக்காக டென்மாா்க் வீரா் மாத்தியாஸ் ஃபுல்லா்டன் மற்றும் அடானு தாசுடன் இணைந்து விளையாடுகின்றனா்.
நடப்புச் சாம்பியனான ’ராஜ்புத்னா ராயல்ஸ்’ அணியில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் மெட்டே கசோஸ், எலா கிப்சன் மற்றும் ஆசிய விளையாட்டுத் தங்கப் பதக்க வெற்றியாளா் அங்கிதா பகத் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வெண்ணம் ’காகதீயா நைட்ஸ்’ அணியை வழிநடத்துகிறாா்.
’மைட்டி மராத்தாஸ்’ அணிக்காக தீரஜ் பொம்மதேவரா மற்றும் மைக்கேல் ஸ்லோஸா் களம் இறங்குகின்றனா். 15 விநாடிகளுக்குள் அம்பை எய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறை இந்தத் தொடரின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.
சோனி லைவ் செயலி மற்றும் உலக வில்வித்தை மற்றும் வில்வித்தை சங்கத்தின் யூடியூப் சேனல்கள் மூலம் லீகை காணலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.