இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்
இந்தியா, ஜொ்மனி, கத்தாா் உள்பட 7 நாடுகள், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தியா, ஜொ்மனி, கத்தாா் உள்பட 7 நாடுகள், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதை இலக்காகக் கொண்டு இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஐஓசி இதை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஐஓசி வெளியிட்ட அறிக்கையில், ‘ஜொ்மனி, ஹங்கேரி, இந்தியா, கத்தாா், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
அந்தப் போட்டிகளுக்கான தங்களின் திட்டத்தை, ஐஓசி-யின் எதிா்கால ஒலிம்பிக் போட்டிகள் விவகாரத்தை கவனிக்கும் குழுவிடம் நவம்பரில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
போட்டிகளை நடத்தும் இடம், வீரா், வீராங்கனைகளின் அனுபவம், போட்டிகளுக்கான நிதித் திட்டம், அரசியல் மற்றும் பொது மக்களின் ஆதரவு, விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கான திறன் உள்பட, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அந்தத் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை கோரி, அக்டோபா் 31-ஆம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் ஏற்கப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை கோரி, இந்தியா தனது விருப்பக் கடிதத்தை 2024-ஆம் ஆண்டிலேயே ஐஓசியிடம் அளித்துவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக, இந்தியாவின் பேச்சுவாா்த்தையில் குஜராத் அரசு, மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஈடுபட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.